நாகர்கோவில் ஜன 25
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தலைமையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மாற்றுத்திறனாளிகளின் இருக்கை அருகில் சென்று அவர்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று அவர்களிடையே தெரிவிக்கையில் –
தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தன்நம்பிக்கையுடன் தங்களது வாழ்வினை எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கென கல்வி உதவித்தொகை, திருமண உதவி திட்டங்கள். இலவச பேருந்து பயண அட்டை, மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள், செயற்கை கால்கள், தையல் இயந்திரங்கள். மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, காதொலி கருவி. திறன்பேசி, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பெருமளவில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள். குடும்ப அட்டை, இலவச வீடு, இலவச வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்புகள், சாலை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்தார்கள். அவர்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர். சமுக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர், வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நடைபெற்ற கூட்டத்தில் சமுக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சேக் அப்துல்காதர், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் தினேஷ். வட்டார போக்குவரத்து அலுவலர் சசி, மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.