தென் தாமரைக் குளம் மார்ச் 17
கன்னியாகுமரி அருகே உள்ள லீபுரம் பாட்டுக்குளத்தில் இருந்து பாதி எரிந்த நிலையில் இளைஞா் சடலத்தை சனிக்கிழமை இரவு போலீஸாா் மீட்டனா்.லீபுரம் பகுதியில் பாட்டுக்குளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்தின் கரையில் பாதி எரிந்த நிலையில் சுமாா் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் சடலமாக கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதன் பேரில் கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ் குமார் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் எரிந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.
அந்த பிணம் அழுகிய நிலையில் காணப்பட்டதால் எரிக்கப்பட்டு சில தினங்கள் ஆகியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பிணத்தை கைப்பற்றி போலீசார் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.