ஈரோடு டிச 13
வாடகை கட்டிடங்களுக்கான ஜி எஸ் டி வரிவிதிப்பை திரும்ப பெற வேண்டும்
ஜி எஸ் டி வரியை எளிமையாக பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் மட்டுமே வசூலிக்க வேண்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள் உணவு பொருட்கள் விற்பனையில் இறங்குவதை தடுக்க வேண்டும். ஆன்லைன் வணிகத்தில் உணவு பொருள்களையும் மருந்து பொருட்களையும் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும் சொத்துக்கள் மீதான வரி ஆண்டுதோறும் 6 சதவீதம் உயர்வு என்பதை திரும்ப பெற வேண்டும் வணிக உரிம கட்டணம் மற்றும் தொழில்வரி போன்றவற்றின் உயர்வை திரும்ப பெற வேண்டும் மாதம்தோறும் மின்கட்டணம் வசூலிப்பதை உடனடியாக அமுல் படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு வீரப்பன் சத்திரத்திலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் திருமூர்த்தி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார்.மாவட்ட தலைவர் சண்முகவேல் முன்னிலை வகித்தார் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மண்டல தலைவர் சந்திரசேகரன் மாநில கூடுதல் செயலாளர் ராஜசேகரன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். இதில் மருந்து வணிகர்கள் சிறு தொழில்கள் சங்கம் இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் நல சங்க நிர்வாகிகள் மற்றும் பவானி கோபி பெருந்துறை சத்தியமங்கலம் சென்னிமலை அம்மாபேட்டை அந்தியூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் பேரமைப்பின் பொருளாளர் உதயம் செல்வம் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இது பற்றி நிர்வாகிகள் கூறியதாவது
வணிகர் சங்கங்களின் பேரமைப்பில்
தமிழகம் முழுவதும் 31 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர் கள் உள்ளனர் .மத்திய அரசு அறிவித்துள்ள வணிக கடை வாடகை மீதான 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி 70 சதவீத வணிகர்களை பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது . மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்வு
கட்டிட உரிமையாளர்களுக்கு சுமையாக மாறி கட்டிட வணிக வாடகை உயர்வுக்கும் வழி வகுக்கும். இது
வணிகர்களையும் நுகர்வோரை
யும் பெருமளவு பாதிக்கும் . இதை மத்திய மாநில அரசுகளின் கவனத்துக்கு எடுத்து செல்வதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எனவே மத்திய மாநில அரசுகளின் வணிகர்கள் மீதான வணிக விரோத சட்டங்களையும் நடவடிக்கைகளையும் கண்டித்தும் வணிகர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று கூறினர்.