தஞ்சாவூர். நவ .17.
தஞ்சை மாவட்ட வணிகர் சங்க மாவட்ட பேரவை அலுவலகத்தில் பேரவையின் அவசர ஆலோசனைக் கூட்டம் நிறுவனர். தலைவர் பி
ராஜா சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் ஹெச். அப்துல் நசீர், மாவட்ட பொருளாளர் டி.ராஜா, நகர தலைவர் பி.சதீஷ், கௌரவ தலைவர். காசி.பாண்டியன், துணை தலைவர்கள் முகமதுமசூத், அப்துல்லா, துணை செயலாளர். ராஜா, மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில்,மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் 23.09.2024 அன்று புதிதாக கடை வாடகைக்கு 18% வரி விதித்துள்ளதை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய அரசை கேட்டுக் கொள்வதோடு வணிகர்களின் சார்பில் கடுமையான கண்டனத்தையும்,
இந்த நவம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ள ஜிஎஸ்டி விதிகளின்படி சொந்த இடத்தில் வணிகம் நடத்தும் பெரும் வர்த்தக நிறுவனங்கள் (கார்ப்பரேட்) இந்த 18% ஜிஎஸ்டி வரியை செலுத்த தேவையில்லை எனவும், சொந்த இடம் வாங்க வசதி இல்லாத வாடகை இடத்தில் கடை நடத்திடும் ஒவ்வொரு சிறு வணிகரும் கடைக்கு செலுத்தும் வாடகை தொகையில் 18% தொகையை மாதந்தோறும் அரசுக்கு வரியாக செலுத்தியாக வேண்டும் என அறிவித்துள்ளது. இது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக எடுக்கப்பட்ட முடிவு. இது சில்லரை வணிகத்தை அழிக்க முயற்சிக்கும் சதி என்பதில் சந்தேகமில்லை. எங்களை போன்ற லட்சக்கணக்கான சில்லரை கடைகளை அழித்துவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்த்து விடும் மத்திய அரசின் இச்செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. சலுகை தரவேண்டும் என்றால் சிறு வியாபாரிகளுக்கு தர வேண்டுமே தவிர பெரு முதலாளிகளுக்கு தரக்கூடாது என்பதுதான் நியாயமான நிலைப்பாடாக இருக்க முடியும் உடனே மத்திய அரசு இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும்,மத்திய அரசு ரத்து செய்ய தவறினால் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் ஒத்துழைப்போடு மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு வணிக சங்கப் பேரவை போராட்டங்களை நடத்திடவும் வணிகர்களை காக்க போராடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆத்மநாதன் நன்றி தெரிவித்தார்.