களியக்காவிளை, மார்- 13-
களியக்காவிளை செங்கல், மகேஸ்வரத்தில் சிவ பார்வதி கோயில் உள்ளது. இந்த கோயிலை தென் கைலாசம் என அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் மற்றும் வைகுண்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டையும் இணைக்கும் வகையில் நடைப்பந்தல் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
இதையொட்டி காலையில் கோயில் நடை திறக்கப்பட்ட பிறகு, நிர்மால்ய தரிசனம் செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து மகா கணபதி ஹோமம், சிறப்பு பூஜை மற்றும் சிலா பூஜை ஆகியவை நடைபெற்றன.
தொடர்ந்து கோயில் தலைவர் சுவாமி மகேஷ்வரானந்த சரஸ்வதி அடிக்கல் நாட்டினார். விழாவிற்கு கோயில் நிர்வாக தலைவர் குமார்.தலைமை வகித்தார். மேற்படி விழாவில் ஜெயச்சந்திரன், கோயில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.