அவிநாசி, பிப். 19-
அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சிக் குட்பட்ட அவிநாசிலிங்கம்பாளையம் நடு நிலைப்பள்ளியில், 17 லட்சம் ரூபாய் மதிப்பில் நபார்டு திட்டத்தில் கணினி ஆய்வுக்கூடம் அறை அடிக்கல் நாட்டுதல், தெக்கலுாரில், 47 லட்சம் ரூபாய் மதிப்பில் கிராம சந்தை மேம்பாட்டு பணி திறப்பு விழா, கருமாபாளையம் கிராமத்தில், நீல கிரி எம்.பி., உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 12 லட்சம் ரூபாய் மதிப்பில் பால் கொள்முதல் நிலையம் திறப்பு விழா, சேவூரில், 15வது நிதிக் குழு மானியம், 2024- 25ம் ஆண்டு திட்டத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், அரசு ஆரம்ப சுகா தார நிலையம் அடிக்கல் நாட்டு விழா ஆகியன நடந்தன.
எம்.பி., ராஜா அடிக்கல் நாட்டினார். மேயர் தினேஷ்குமார், அவைத் தலைவர் நடராஜன், பகுதிச் செயலாளர் கெ. ராமதாஸ், தி.மு.க., மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் கோகுல் கிருபாஷங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, வர்த்தக அணி பிரிவு மணி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாஷ், பழனிசாமி, பால்ராஜ், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் அவிநாசியப்பன் மற்றும் பலர் பங்கேற்றனர்.