திருப்பூர் ஜூலை: 21
இணைந்தெழு தமிழ்நாடு அமைப்பின் பொறுப்பாளர் இனாமுல் ஹசன் தலைமையில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள்.
சென்னை தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்ற இணைந்தெழு தமிழ்நாடு அமைப்பின் மாநில செயற்குழு கூட்டத்தில்
சிறப்பு விருந்தினராக முன்னால் IAS அதிகாரியும் திருவள்ளூர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான
சசிகாந் செந்தில் M.P கலந்து கொண்டு நடைபெற்று முடிந்த 2024 பாராளுமன்றத் தேர்தலில் மக்களை நேரில் சந்தித்து களப் பணியாற்றிய தோழர்களுக்கு வாழ்த்து மடல்களை வழங்கினார்.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வு தொண்டர்கள் களப்பணியாளர் மனித உரிமை ஆர்வலர்கள் என துடிப்பு மிக்க இந்தியா என்ற சிந்தனை கொண்டவர்கள் அரங்கத்தில் ஒன்று கூட சசிகாந் செந்தில் M.P அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
இந்திய அரசியல் அமைப்பு சாசன சட்டம்தான் இந்தியாவின் உயிர் மூச்சு அதை காப்பாற்ற தலைவர்
ராகுல் காந்தி அவர்களின் தலைமையில் சிறந்த முறையில் பயணிப்போம்.
பாசிசம்இல்லாத வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவை புதிய முயற்சியில்புதிய சிந்தனைகளோடு ஆற்றல் மிக்க இந்தியாவை உருவாக்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகியும் இணைந்தெழு தமிழ்நாடு பாராளுமன்ற ஒருங்கிணைப்பாளர்M.P.சாதிக் அவர்களின் தலைமையில் திருப்பூர் நிர்வாகிகள் ஹாஜா நடராஜன் முஹம்மது உசேன் ஜெயினுலாபுதீன்,மூர்த்தி கலந்து கொண்டு வாழ்த்து மடல்களை சசிகாந் செந்தில் M.P அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்கள்.