ஈரோடு, டிச.15
ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்கள் ஒளிரும் ஈரோடு அமைப்பு, ரவுண்ட் டேபின் இந்தியா, பி.என்ஐ ஆகிய சமூக அமைப்புகளுடன் இணைந்து ‘விதை சிறிது விடை பெரிது 3.0 என்ற கருப் பொருளின் அடிப்படையில் பசுமை திருவிழா நந்தா என் ஜினீயரிங் கல்லூரியில் நடை பெற்றது. விழாவுக்கு நந்தா கல்வி அறக்கட்டனை தலை வர் சண்முகன் தலைமை தாங்கினார். ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவர் சின்ன சாமி, சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் தர்மராஜ், ஈரோடு
ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் தலைவர் கார்த்திகேயன் ஜே.சி.ஐ முன்னாள் தலைவர் யுவராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து ஆன் லைன் மூலம் முன்பதிவு அடிப்படையில் பதிவு செய்திருந்த மாணவர்களுக்கு 25 வகையான 12 ஆயிரம் மரக் கன்றுகளை, நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் வழங்கினார் மரக்கன்றுகளை பெற்றுநடவு செய்பவர்களுக்கு சான்றிதழ் களும். 3 மாதத்திற்கு ஒரு
முறை மரக்கன்றின் வளர்ச்சியுன் வளர்ச்சியின் புகைப்படத்தை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து பராமரித்து வளர்த்து வரும் மாணவர்களுக்கு பசுமை பாதுகாவலன் விருதும் வழங் கப்பட உள்ளது விழாவில் தந்தா கல்வி அறக்கட்டளை செயலாளர் நந்தகுமார் பிர தீப், கல்வி நிறுவனங்களின் செயலாளர் திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர் முன்ன தாக என்ஜினியரிங் கல்லூரி முதல்வர் ரகுபதி வரவேற்றார். முடிவில் தொழில் நுட்ப கல்லூரி முதல்வர் தந்தகோபால் நன்றி கூறி னார்.