ஈரோடு ஆக 28
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமி ழகம் முழுவதும் என் உயி ரினும் மேலான என்ற தலைப்பில் பேச்சுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.
அதனைத்தொடர்ந்து ஈரோடு வடக்கு தெற்கு மாவட் டம் திமுக இளைஞர் அணி சார்பாக என் உயிரி னும் மேலான கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டி ஈரோடு மாவட்ட திமுக அலுவலகத்தில நடைபெற்றது.
இதில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு பேச்சு போட்டியினை துவக்கி வைத்தார்
இதில் கல் லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தங்களது தனித் திறமை களை வெளிப்ப டுத்தினார்கள்.
இது குறித்து ஈரோடுவடக்கு தெற்குமாவட்ட இளைஞரணி அமைப்பாளர்களாக திரு வேங்கட சாமி திருவாசகம் ஆகியோர் கூறியதாவது
முத் தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற் றாண்டை பறைசாற்றும் விதமாக என் உயிரினும் மேலான என்ற தலைப்பில் நடைபெற்ற பேசசு போட்டியில் பங்கேற்ற மாணவ
மாணவிகள் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினின் சிறப்பான செயல் பாடுகள் மற்றும் கலைஞர் செய்த சாதனைகள் பெரி யார் அண்ணா ஆகியோ ரின் வரலாற்றுசிறப்புமிக்க சாதனைகளை தலைப்புகளாக தேர்ந்தெடுத்து பேசி தங்களது திறமைகளை . வெளிப்படுத்தினர்
திறம்பட பேசிய முதல் மாணவ மாணவியர்களை தேர்வு
செய்து தலா ரூ பத்தாயிரம் ரொக்கமும் சான்றிதழ்கள் மற்றும் மெடல்கள் வழங்கப் பட்டது. பேட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றி தழ்கள், நினைவுப் பரிசு கள், மெடல்கள், ஊக்கத் தொகை ஆகியவை வழங்கப்பட்டது. அனைவருக்கும் காலை மதிய உணவு வழங்கப்பட்டது என்று கூறினர்.
இதில் அந்தியூர் செல்வராஜ் எம் பி மற்றும் வடக்கு தெற்கு மாவட்ட இளைஞர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் மாநகர அமைப்பாளர் சேந்தன் புகழன் நன்றி கூறினார்.