மதுரை நவம்பர் 22,
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் உபகோயில்களில் 21 ந் தேதி நேற்று காலை 7.35 மணியளவில் எழுகடல் தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு காஞ்சனமாலையம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மேலும் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் உபகோயிலான கீழமாசி வீதியில் அமைந்துள்ள அருள் மிகு தேரடி கருப்பணசாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
நடைபெற்றது. மேலும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் உபகோயிலான சுடுதண்ணீர் வாய்க்கால் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.