மதுரை அக்டோபர் 7,
மதுரை மாவட்டத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைசர் மூர்த்தி தலைமையில் திமுக மாநில இலக்கிய அணி செயலாளர் நேரு பாண்டியன் சார்பாக மாபெரும் இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதலாவதாக வெற்றி பெற்ற பெரிய மாட்டிற்கு வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைசர் மூர்த்தி தலைமையில் முதல் பரிசாக ஒரு லட்சத்தை திமுக மாநில இலக்கிய அணி செயலாளர் நேரு பாண்டியன் வழங்கினார். இரண்டாவது பரிசாக எழுபத்தைந்து ஆயிரமும், மூன்றாவது பரிசாக ஐம்பது ஆயிரமும், ஆறுதல் பரிசாக இருபது ஆயிரம் வழங்கினார்கள். இதேபோல் சின்ன மாட்டிற்கு முதல் பரிசாக ஐம்பது ஆயிரமும், இரண்டாவது பரிசாக நாற்பது ஆயிரும், மூன்றாவது பரிசாக முப்பது ஆயிரும், ஆறுதல் பரிசாக பத்து ஆயிரமும் கோப்பைகளும் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில்
சோழவந்தான் சட்ட மன்ற உறுப்பினர் வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கி,
மதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் (வடக்கு) சிறைச்செல்வம் வரைவேற்புரை வழங்கினார். உடன் ஆனையூர் பகுதி செயலாளர் மருது பாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். காவல் ஆய்வாளர் சாந்தி பாலாஜி
போக்குவரத்தை சீர் செய்து சிறப்பாக பாதுகாப்பு அளித்து இருந்தனர்.