சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரமனூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர்
பழனிச்செல்வம் முருகன் தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கிராம நிர்வாக அலுவலர் வேளாண்மை துறை அலுவலர் அரசு துறை அதிகாரிகள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து ஊராட்சி செயலர் சந்திரசேகர் ஊராட்சியின் 2024-2025 ஆண்டிற்கான திட்ட அறிக்கைகளை முறையே எடுத்துரைத்தார்.
இந்த கூட்டத்தின் போது ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஆரம்ப சுகாதாரம் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மகளிர் குழுவினர் உட்பட கிராம பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.