வேலூர்=03
வேலூர் மாவட்டம் வேலூர் ஊராட்சி ஒன்றியம் சதுப்பேரி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபா கூட்டம் சதுப்பேரி ஊராட்சி மன்ற அலுவலகம் வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவரும் கிராம சபா தலைவருமான சுஜாதா சதிஷ்பாபு தலைமையில் நடைபெற்றது. உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மு .கௌரி, அ. வின்சென்ட் ரமேஷ்பாபு ஒன்றிய குழு உறுப்பினர் வள்ளி ,துணை தலைவர் எம் .ஜெயக்குமார், மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ,கிராம நிர்வாக அலுவலர் செந்தமிழ் அரசன், ஊராட்சி செயலாளர் எ. சிந்து மணி, மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகள் தேர்வு செய்தல் குறித்து விவரம் ,வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல் ,அங்கன்வாடி சுகாதாரம் உணவுப் பொருட்கள் வழங்கல் ,மதிய உணவு திட்டம் ,வேளாண்மை ,தோட்டக்கலை துறை , பால்வளம் ,மீன்வளத்துறை மற்றும் இதர அரசுத்துறைகளின் களஅலுவலர்கள், கலந்து கொண்டு துறை சார்பான விவரங்களை விவாதித்தனர்.