தென்தாமரைகுளம்.,அக்., 3
சாமிதோப்பு ஊராட்சியில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று ஊராட்சித் தலைவர் மதிவாணன் தலைமையில் கிராம சபைக் கூட்டம் செட்டிவிளை ரேஷன் கடை அருகில் வைத்து நடைபெற்றது.
இந்தகூட்டத்தில்
கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து
விவாதிக்கப்பட்டது.
. கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை 2023-2024 – சமர்ப்பித்தல்.
தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதிசெய்வது குறித்து விவாதித்தல்,
மக்கள் திட்டமிடல் இயக்கம்.,
. மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம்,
. ஜல்ஜீவன் இயக்கம் உங்களிடம் திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது கூட்டத்தில் ஊராட்சி துணை தலைவர் ஜெயபார்வதி, வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மரதி,தனித்திறன் உதவியாளர் சந்திரன், வார்டு உறுப்பினர்கள் தங்கபத்மா, சரண்யா, சரவணன், சகுந்தலா,சாந்தி, மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்