திருப்பத்தூர்:ஜூலை, 03 கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி கிராமத்தில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது. கிராம சபா கூட்டத்தின் முக்கிய தீர்மானங்களாக ” கலைஞரின் கனவு இல்லம் 2024-2025″ ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்ந்தெடுத்தல், ஊரக குடியிருப்பு பழுது பார்க்கும் திட்டம் குறித்து கலந்து ஆலோசித்தனர்.
இந்நிலையில் பல்வேறு கணக்கெடுப்புகளின் மூலம் சேகரிக்கப்பட்ட வீட்டு வசதி தேவைகளுக்கான தரவுகள் ஒருங்கிணைக்கப்பட்ட “அனைவருக்கும் வீடு” கணக்கெடுப்பு விவரங்கள் கிராம ஊராட்சி அளவிலான குழு மூலம் கள ஆய்வு செய்து சரிபார்க்கப்பட்டு தகுதியான பயனாளிகள் பட்டியலிருந்து 2024- 25 ஆம் ஆண்டுக்கான கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கான ஒதுக்கீட்டு எண்ணிக்கைக்கு ஏற்ப பயனாளிகளை தேர்வு செய்தல் மற்றும் ஒதுக்கீட்டு எண்ணிக்கைக்கு கூடுதலாக 20% சதவீதத்திற்கு கிராம சபையின் மூலம் தீர்மானம் கொண்டு வந்தனர். ஓட்டு வீடுகள், சாய்தள கான்கிரெட் வீடுகள், கூரை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டது. 2000-2001 ஆம் ஆண்டிற்கு முன்பு கட்டப்பட்ட ஓட்டு வீடுகள் மற்றும் சாய்தள கான்கிரெட் வீடுகள், கூரை வீடுகள் பழுது நீக்கம் செய்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட குழு மூலம் பெறப்பட்ட பயனாளிகளை குழு மூலம் தேர்வு செய்தனர். மேலும் இக்கூட்டத்தில் கிராம ஊராட்சியில் பின் தங்கிய, நடுத்தர குடும்பத்தின் வீடுகளையும் கணக்கெடுக்கும்படி அடுத்த கட்டமாக வழங்கப்படும் என அறிவுறுத்தினர். இந்த கிராம சபா கூட்டத்தில் வட்டார தமிழ்நாடு முழுவதும் கிராம சபா கூட்டம் நடைபெற்ற நிலையில் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி மேனகா விவேகானந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி ரெஜினா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி மகராசி ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்றது. தீர்மானத்தில்: ஓட்டு வீடுகள் சீட்டு வீடுகள் உள்ளவர்களையும் இத்திட்டத்தில் திட்டத்தில் பயனாளிகளாக சேர்த்து இலவச வீடுகள் வழங்க வேண்டும் எனவும் அதற்கான பட்டியலை கிராம சபாவில் வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டு பட்டா உள்ளவர்களுக்கும் மற்றவர்களின் ஒப்புதல் உடன் வீடு வழங்க வேண்டும். அரசு தொழிலாளிகளுக்கு வீடுகளில் கட்டி வழங்கிட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் சண்முகப்பிரியா கமலநாதன் ஊராட்சி மன்ற துணை தலைவர் S.ஆனந்தன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அருட்செல்வி சங்கர், பூங்கொடி மோகன், மதுமதி வினோத், விஜியா சீனிவாசன், குமரன், வினோதினி குமரன், குமரேசன், மாலினி நந்தனார், ஊராட்சி செயலாளர் இராஜேஷ், ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் K.விவேகானந்தன் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் என பலரும் பங்கேற்றனர்.