ஈரோடு ஜூன் 16
ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள டாக்டர் ஆர் ஏ என் எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது முதலியார் கல்வி அறக்கட்டளை தலைவர் ராஜமாணிக்கம் செயலாளர் மற்றும் தாளாளர் கே கே பாலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் கல்லூரி முதல்வர் பழனியப்பன் வரவேற்றார்
விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் கலந்து கொண்டு வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற 15 மாணவ மாணவியருக்கு பட்டம் மற்றும் பதக்கங்களையும் 238 இளங்கலை மற்றும் 42 முதுகலை மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களையும் வழங்கிப் பேசினார் இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் முதலியார் கல்வி அறக்கட்டளையின் பொருளாளர் விஜயக்குமார் இணை செயலாளர் அருண்குமார் துணைத் தலைவர்கள் மாணிக்கம் ராமச்சந்திரன் மற்றும் ரவிச்சந்திரன் மற்றும் மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் உட்பட பலர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.