திருவள்ளூர் மாவட்டம் ஏப். 29
தனியார் பள்ளிகளுக்கு மேலாக ஆங்கிலத்தில் உரையற்றி அசத்தும் அரசு பள்ளி மாணவ மாணவிகள் புத்தகம் வாசித்தல் பேச்சுப் போட்டி கவிதை போட்டி என்று தரத்தில் முதலிலும் வகிக்கும் பள்ளியாக பூண்டி ஒன்றியத்தில் மேல்விளாகம் தொடக்கப்பள்ளி திகழ்ந்து வருகிறது.
அந்த வகையில் இப்பள்ளியில் இந்த ஆண்டு கல்வி முடித்த மேல் வகுப்புகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா தனியார் பள்ளிகளுக்கு நிகராக நடத்தி அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என்ற விழிப்புனர்வை
ஏற்படுத்தினர்.
இந்த விழாவில் பூண்டி வட்டார கல்வி அலுவலர் பூவராகவ மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் பட்டம் அளித்து கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் மற்றும் உதவியாசிரியர் செல்வி சொர்ணம் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தினர்.