அல் கலம் கல்வி குழுமத்தின் தலைவர் ஷேக் அப்துல் குத்தூஸ் அழரி தலைமை வகித்தார்
ராமநாதபுரம், டிச.30-
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அருகே
பெருங்குளம் அல் கலம் இன்டர்நேஷனல் பள்ளியில்
5 வந்து மழலையர் பட்டமளிப்பு விழா மற்றும் 3 ஆம் ஆண்டு கல்வி விழிப்புணர்வு மாநாடு வெகு சிறப்பாக நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான பெருங்குளம்
அல் கலம் இன்டர்நேஷனல் பள்ளியில் ஆண்டுதோறும் கல்வி மாநாடு நடத்தி அதில் கல்வி குறித்தும் சமூகத்தில் கல்வியின் முன்னேற்றம் குறித்தும் பல அறிஞர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு மூன்றாம் கல்வி மாநாட்டில்
அல் கலம் குழும நிறுவனங்களின் நிறுவனர், தலைவர் ஷேக் அப்துல் குத்தூஸ் அழரி தலைமை உரையில்
பேசும்போது:
பொருளாதார விளைவுகளைய மேம்படுத்த நமது சமூகத்தில் கல்வியில் உள்ள இரண்டு சவால்களையும் மாற்ற வேண்டிய அவசியத்தை இது போன்ற கல்வி மாநாட்டில் விவாதிக்க வேண்டிய ஒரு அவசியம் இருப்பதால் நாங்கள் இந்த கல்வி மாநாட்டை நடத்தி அதில் கல்வி, பொருளாதாரம், நிபுணத்துவம் பெற்றவர்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் கலந்து கொள்ளச் செய்து அவர்கள் பெற்றோர்களுடன் விவாதித்து கடைக்கோடி சாமானியனுக்கும் கல்வி எளிதாக கிடைக்க வேண்டும் என்ற ஒரு உன்னத நோக்கில் இந்த மாநாட்டை நடத்தி வருவதில் பெருமை கொள்கிறோம். எங்கள் கல்வி குழுமத்தின் கல்வி நிறுவனங்கள் வெளிநாடு மட்டுமின்றி தமிழகத்தில் சென்னையில் உள்ள மக்களுக்கும் ராமநாதபுரம் மாவட்டம் மக்களுக்கும் மிகவும் பயனுள்ள வகையில் தரமான கல்வியை வழங்குவதுடன் இங்கு பயிலும் மாணவர்கள் கல்வி விளையாட்டு பேச்சுத் திறன் கலைத்திறன் உள்ளிட்ட அனைத்து திறன்களையும் வளர்த்துக் கொண்டு நம் மண்ணில் பிறந்த அப்துல் கலாம் போன்ற ஒரு உயர்ந்த மாமனிதராக உருவாக்குவதற்கு எங்களது கல்வி நிறுவனம் மிகவும் தன்நலமற்ற சேவையை செய்து வருகிறது. இந்த சேவையை நன்கு பயன்படுத்திக் கொண்டு அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்,
இவ்வாறு அவர் பேசினார்.
கல்வி மாநாட்டில் பெருங்குளம் அல் கலம் இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் மெஹபூப் நிஷா வரவேற்றார். பெரியபட்டினம் அல் கலம் நர்சரி ஆரம்பப் பள்ளி முதல்வர் நிசரா பாத்திமா, பூண்டி அல் கலம் இன்டர்நேஷனல் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதல்வர் பரனா , மண்ணடி அலீப் நர்சரி ஆரம்பப் பள்ளி சலாமத் பர்வீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி , தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்க நிறுவனர் சலீம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிய பல கருத்துக்களை எடுத்துக் கூறினர்.
இப்காரு தின் பாகவி ( ஆஸ்திரேலியா), அல் கலம் குழும நிறுவனங்களின் தாளாளர் அப்துல் ரஹ்மான், பீகார் ஜாமியா ஹசன் பின் சபித் இயக்குநர் சலிமுல்லா ரஷிதி நட்வி, கலம் குழும நிறுவனங்களின் நிதி மேலாளர் ஹிஜாமுதீன் மற்றும் ஜமாத்தார்கள் ஊர் பொதுமக்கள் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.