அருமனை, பிப்-11
குமரி மாவட்டம் மேல்புறம் அருகே இடைக் கோடு அரசு தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்கமாக இடைக்கோடு பேரூராட்சி தலைவர் உமாதேவி மற்றும் முன்னாள் பள்ளி மாணவியும், பேராசிரியையுமான பிந்து ஆகியோர் புத்தன் சந்தை சந்திப்பில் விழா ஜோதியை வழங்க வக்கீல் லாரன்ஸ் பெற்றுக் கொண்டார்.
ஜோதி பயணம் பள்ளி வளாகம் வரை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன் வந்தடைந்தது. தொடர்ந்து நடந்த கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். மாநில பெற்றோர் ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் சிந்து குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த விழா வரும் கல்வி ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.