பரமக்குடி. ஜூலை. 23 :
பரமக்குடியில் இந்து முன்னணி சார்பாக கோவிலை விட்டு தமிழக அரசு வெளியேறு என்ற கோஷத்துடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக முழுவதும் இந்து முன்னணி சார்பாக கோவிலை விட்டு தமிழக அரசு வெளியேறு என்ற கோரிக்கையுடன் போலீசாரின் தடையை மீறி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பரமக்குடி ஒன்றியம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்தார.நகர் தலைவர் குமரன் முன்னிலையில் வைத்தார். மாவட்ட பொருளாளர் ஆதித்தன், நகர் துணைத் தலைவர் தாமோதரன், நகர் செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.மாநில பேச்சாளர் கங்காதரன் சிறப்புரையாற்றினார் நகர் செயற்குழு உறுப்பினர் ரமேஷ் பாபு கூறினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கலந்து கொண்டனர்.