ஊட்டி.டிச.18.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6. தாலுகாவில் கூடலூர் முக்கியத்துவம் பெற்ற தாலுகாவாகும். கேரளா, கர்நாடகா சங்கமிக்கும் இடமாக கூடலூர் வட்டம் உள்ளது. வாசனை திரவியங்கள், தானியங்கள், தேயிலை, காப்பி என பல தரப்பட்ட விவசாய உற்பத்தி செய்யும் இடமாகவும் வனவிலங்கு உயிரின உய்விடமாகவும் கூடலூர் பகுதி உள்ளது. தொழிலாளர்கள், வணிகத்தினர் என அதிகமாக கூடும் கூடலூர் பந்தலூர் என இரண்டு வட்டங்களை உள்ளடக்கியது. பலதரப்பட்ட மக்கள் கூடும் இடமாக உள்ள கூடலூரில் தனியார் மருத்துவமனைகளும் குறைவாகவே உள்ளன. அவசர சிகிச்சைகள் விபத்துகள் என அனைத்து தேவைகளுக்கும் கூடலூர் செல்லும் அரசு பொது மருத்துவமனையை மட்டுமே மக்கள் நாட வேண்டியுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இன்றியும் மருத்துவமனைக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறாக உள்ளது.
உயிர்காக்கும் முக்கிய அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி போன்றவை இல்லாமலும் முதலுதவி செய்யக்கூட வழி இல்லாத நிலையில் போதிய மருத்துவர்களும் இல்லாமல் உயிருக்கு போராடிவரும் நோயாளிகளை ரெப்பர் என்ற பெயரில் கேரளாவுக்கும் கோவைக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அலைகழிக்கப்படுகிறார்கள். இதனால் பலர் உயிரிழக்கும் அபாய நிலையும் உள்ளது. கடந்த காலங்களில் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை என அறிவித்து ஆய்வுகள் செய்து நிதி ஒதுக்கியும் எதுவும் செயல்படாத அவல நிலையில் காட்சியளிப்பதோடு அவலத்தின் அடையாளமாகவே உள்ள கூடலூர் அரசு மருத்துவமனை உள்ளது. இம் மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டுக்கு பயனுள்ளதாக்கி போதிய மருத்துவர்களை நியமித்து, மருத்துவமனைக்கு செல்லும் சாலையை விரைவாக செப்பனிடவும் கோரி கூடலூர் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் அக்கட்சியின் ஒன்றிய பொருப்பாளர் கேதீசுவரன் தலைமையில் கட்சியின் நிர்வாகிகளுடன் சென்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.