அரியலூர், அக்;01
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி என்எஸ்எஸ் முகாம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு என் எஸ் எஸ் முகாம் மாணவர்கள் மருவத்தூர் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் என் எஸ் எஸ் முகாம் துவக்க விழா 30 ம் தேதி திங்கட்கிழமை காலை 9.30மணி அளவில் மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா முருகன் துவக்கி வைத்தார். பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதிலிங்கம் தலைமை தாங்கினார். ப.பஞ்சாபகேசன் முதுகலை விலங்கியல் ஆசிரியர் மற்றும் என் எஸ் எஸ் திட்ட அலுவலர் வரவேற்புரை ஆற்றினார்.விழாவில் மருவத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை க.சாந்தி, ஒன்றியக் குழு உறுப்பினர் பரஞ்சோதி செல்வம் பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் இருபால் ஆசிரிய பெருமக்களும் வாழ்த்து தெரிவித்தனர் .ப.வேல்முருகன் என் எஸ் எஸ் திட்ட சிறப்பு முகாம் உதவி அலுவலர் நன்றி உரையாற்றினார்.