சின்னமனூர்.
சிறந்த ஆசான்களுக்கான சிறந்த ஆசான் விருது வழங்கும் விழா சென்னை ஆளுநர் மாளிகையில் சனிக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள சிலம்பபயிற்சியாளர்கள்,ஆசான்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் வீரமங்கை வேலுநாச்சியார் சிலம்ப கலைக்கூடம் ஆசான் ஈஸ்வரன் அவர்களுக்கு சிறந்த ஆசான் விருதுநை ஆர்.என். ரவி வழங்கினார். உடன் பல்வேறு மாவட்ட ஆசான்கள்,பயிற்சியாளர்கள்,பெற்றோர்கள் மாணாக்கர்கள்,துறை சார்ந்த அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிறந்த ஆசான் விருது பெற்று ஊர் திரும்பிய ஈஸ்வரனுக்கு பெற்றோர்களும், மாணாக்கர்களும் சின்னமனூரில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.