திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்துறை சார்ந்த முடிவுற்ற கட்டிடங்ளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து 2333 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
திருப்பத்தூர்:ஆக:31, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால் குப்பம் பகுதி தனியார் திருமண மண்டபத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் 2333 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் வாழ்த்துரை வழங்கினார். திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் N.K.R. சூரியகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வருவாய் துறை சார்பில் நத்தம் வீட்டு மனை பட்டா ஐம்பது பயனாளிகளுக்கு ரூபாய் 30 லட்சம் மதிப்பிலும், இ-பட்டா 481 பயனாளிகளுக்கும், திருமண உதவித்தொகை 1, இயற்கை மரண உதவித் தொகை 12, விபத்து நிவாரணம் 8, பழங்குடியினர் சாதிச் சான்றிதழ்கள் 10, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் 15 பயனாளிகளுக்கும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 600 பயனாளிகளுக்கும், தொழிலாளர் நலத்துறை சார்பில் ஈமச்சடங்கு உதவித்தொகை 19 பயனாளிகளுக்கும், திருமண உதவித்தொகை 20 பயனாளிகளுக்கும், ஓய்வூதியம் 300, கல்வி உதவித்தொகை 180, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உபகரணங்கள் வழங்குதல் 4, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தையல் இயந்திரம் 6, மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் புதிய குடும்ப அட்டை 50 பயனாளிகளுக்கும், மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் துறை வேளாண்மை துறை தோட்டக்கலை துறை கூட்டுறவு துறை மகளிர் திட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை உள் அடங்கிய துறைகளுக்கு மொத்தம் 2333 பயணிகளுக்கு ரூபாய் 359636110 மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ. வேலு நல திட்ட உதவிகளை வழங்கி திருவள்ளுவரின் திருக்குறளை அடிக்கோடிட்டு பேசுகையில்: திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக இருந்து வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தின் மேல் தனி கவனம் செலுத்தி அடிக்கடி இந்த பகுதிகளுக்கு நேரடியாக வந்து தேவையான நலத்திட்டங்களை அவ்வப்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் எடுத்துக் கூறி பெற்றுத் தருகிறேன். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தின் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் அனைவரும் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து என்னிடம் பல திட்டங்களை பெற்று சென்று அந்தந்த தொகுதி மக்களிடம் நல்ல பெயர்களை பெற்றிருக்கிறார்கள் என்பது பாராட்டுக்குரியது. கடத்த பத்து ஆண்டுகளில் திருப்பத்தூர் மாவட்டம் நாங்கள்தான் உருவாக்கினோம் என்று சொல்லிக் கொள்ளும் மாற்று கட்சியினர் இந்த மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் 80% சதவீதம் பணத்தை செலவினம் செய்து சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டது. 2023- 24,25 ஆகிய ஆண்டுகளுக்கான மாவட்ட மருத்துவ துறையின் சார்பில் ஏறக்குறைய 56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிதாக மருத்துவ கல்லூரி கொண்டு வர இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. திராவிட மாடல் ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு அதிகமான பாலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சாலை பாதுகாப்பு பராமரிப்பு 11 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாபர்டு திட்டத்தின் கீழ் 27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆம்பூர் புதிய பாலம் துவங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு துரிதமான பணிகள் செயல்பட்டு வருகிறது. மேலும் கிராம ஊராட்சிகளுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் திட்டங்களின் சிறப்பான திட்டங்களில் ஒன்றான மகளிர் உரிமை தொகை, மருத்துவ காப்பீடு திட்டம், மகளிர்களுக்கான இலவச பேருந்து பயணம், கலைஞர் கனவு இல்ல திட்டம், அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கு புதல்வன் திட்டம், மக்களுடன் முதல்வர் திட்டம், உங்களைத் தேடி உங்கள் ஊரில் உங்கள் முதல்வர் ஆகிய திட்டங்களின் மூலமாக பல்வேறு செயல் திட்டங்களை செய்து வருவது திராவிட மாடல் ஆட்சி என்று குறிப்பிட்டு பேசினார். இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஆவின் பால்வள துறை தலைவர் வழக்கறிஞர் எஸ் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் சத்யா சதீஷ்குமார், ஜோலார்பேட்டை நகர மன்ற சேர்மன் காவியா விக்டர், மேலும் இந்நிகழ்ச்சியில்ப மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், பொதுமக்கள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.