தருமபுரி அடுத்த பைசுஹள்ளி உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனு உதவிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் மணி, எம்எல்ஏக்கள் வெங்கடேஸ்வரன், மணி, கிழக்கு மாவட்ட செயலாளர் தர்ம செல்வன், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சிகள் தேசிய மயமா க்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் 649 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 9 ஆயிரத்து 123 பயனாளிகளுக்கு ரூ. கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். உலக மகளிர் தினத்தையொட்டி,
தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் சார்பாக அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை ஆட்சியர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். விழாவில் ஆட்சியர் கூறியதாவது. பெண் கல்வியிலும், பெண்களின் வளர்ச்சியிலும் முதன்மை பெற்ற மாவட்டமாக தருமபுரி மாவட்டம் உருவாக வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் கிடைக்கப்பெறும் நிதி உதவியுடன் உறுப்பினர்களாக இருக்கும் பெண்கள் தாங்கள் சுயமாக, பிறர் உதவியின்றி சுயதொழில் புரிந்து பொருளாதார ரீதியில் தன்னிறைவு அடைந்து வாழ்க்கை நடத்தி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் கிடைக்கப்பெறும் நிதியு தவியுடன் தாங்கள் சுயமாக சுய தொழில் புரிவதற்கும் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை மகளிர் சுய உதவி குழுக்கள் முழு முயற்சியோடு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஆட்சியர் பேசினார்.இவ் விழாவில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் லலிதா, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் மலர்விழி, நகராட்சி தலைவர் லட்சுமி நாட் டான் மாது உள்பட பேரூராட்சி தலைவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.