திருப்பத்தூர் மாவட்டம்
நாட்றம்பள்ளி:டிச:18, திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் புதியதாக தொடங்கப்பட உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் என்.கே.ஆர். சூரியகுமார், நாட்றம்பள்ளி பேரூராட்சி தலைவர் திருமதி. சசிகலா மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.