நாகர்கோவில் ஜூன் – 07,
குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடைநிலை ஊழியராக பணிபுரிந்து வருபவர் காந்திநகர் காலனியைச் சேர்ந்த சுரேந்திரன் வயது (54), திருமணமாகி மனைவி மற்றும் மகன், மகள், என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக பல்வேறு நபர்களிடம் பணம் கடனாக பெற்றுள்ளதாகவும் , கடன் பெற்றவர்களிடம் கடனை முறையாக திரும்ப செலுத்த முடியாத நிலையில் மணமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது, இந்த நிலையில் நேற்று ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவ மணையில் காலை பணியில் இருக்கும் போது சுரேந்திரன் மனமுடைந்து விஷ மாத்திரைகளை சாப்பிட்டு உயிருக்கு போராடியதை பார்த்த சக ஊழியர்கள் சுரேந்திரனை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமணையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர் . ஆனால் சிகிச்சை பலன் அழிக்காமல் அவர் உயிரிழந்தார். அவரது உடல் ஆய்வு கூறுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப் பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.