காஞ்சிபுரம் ஏப்ரல் 10
காஞ்சிபுரம் மாவட்டத்தில்
பாஜக ஸ்தாபன தினத்தை முன்னிட்டு உத்திரமேரூர் அருகே அரசு மருத்துவமனையை சுத்தம் செய்து, மர கன்றுகள் நட்ட பாஜகவினர்.
1980 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ம் தேதி பாஜக துவங்கப்பட்டது. அதனை கொண்டாடும் வகையில் 45 வது ஸ்தாபன தினத்தை முன்னிட்டு பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை பாஜகவினர் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் உத்திரமேரூர் அடுத்த கலியாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாஜகவினர் தூய்மை பணிகளை மேற்கொண்டு மர கன்றுகளை நட்டு, பொது மக்களுக்கு சிற்றுண்டி அன்னதானம் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியானது விழா குழு பொறுப்பாளர் சீனிவாசமூர்த்தி தலைமையில்,
முன்னாள் இளைஞரணி செயளாலர் பாரதி, கிளை தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் அந்த கட்சியின் மூத்த நிர்வாகி ரமேஷ் முன்னிலையில், நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் துணை தலைவர் சோழனூர் ஏழுமலை மற்றும் மாவட்ட நிர்வாகி ராஜவேலு, உத்திரமேரூர் மண்டல தலைவர் விக்னேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தூய்மை பணியை துவக்கி வைத்து, மர கன்றுகளை நட்டனர்.
இந்த தூய்மை பணியில், ரவிக்குமார், கோதண்டன் தியாகராஜன், சங்கர், சுப்ரமணியன், வீரபத்திரன், பிரேம்குமார், மனோகரன், குமார், ஜோசப், முருகன், நாகரத்தினம் உள்ளிட்ட பாஜகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டு தூய்மை பணிகளை செய்தனர்.