தென்காசி மாவட்டம் மருத்துவ கழிவுகளை பாதுகாப்பு இல்லாமல் எரிக்கும் அரசு தலைமை மருத்துவமனை
தென்காசி மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் இரவு நேரத்தில் மருத்துவ கழிவுகளை எரித்து சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தும் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை
தென்காசி மாவட்டத்தில் தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வரும் மருத்துவமனை சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து பல்வேறு மருத்துவ பிரிவுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக மருத்துவமனையின் கீழ் பகுதியில் வெளிப்புற நோயாளிகளின் பிரிவின் அருகில் பாழடைந்த கட்டிடத்தில் நேற்று இரவு மருத்துவ கழிவுகளை மருத்துவமனை நிர்வாகம் தீ வைத்து எரித்துள்ளது. இதனால் இதன் கீழ் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் நகர், சிவ இளங்கோநகர், குறிஞ்சி நகர், திருநகர் ஆகிய பகுதிகளில் அதிக புகைமூட்டமாகவும் கடுமையான துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கும்போது மேற்படி பாழடைந்த கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் அப்போது தான் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு ஏற்படும் இதை மாவட்ட நிர்வாகம் உடனடியாக செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.