திருப்பத்தூர்:ஏப்:4, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிட வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டமானது அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது.
கண்ணன் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கை விளக்கத்தினை மாவட்ட செயலாளர் பாண்டியன் வாசித்தார்.
மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், முரளிவாணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில், பெரம்பலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக அத்துறை சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் காந்திமதி நாதன் மற்றும் பொதுச் செயலாளர் பிரபு ஆகியோர் நிர்வாகிகளுடன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் பாஸ்கரன் ஆகியோர் பெரம்பலூர் மாவட்ட திட்ட அலுவலர் மற்றும் ஆட்சித் தலைவர் கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ் அவர்களை சந்தித்து கோரிக்கை மணி கொடுத்து பேசி உள்ளனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததோடு, கொடுத்த மனுவை கசக்கி கீழே இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் கோரிக்கை மனுவினை அளித்தவர்களை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் அழைத்து சென்றனர்.
காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதோடு நிர்வாகிகளின் அலைபேசிகளை கையில் பிடுங்கி கொண்டனர். காவல்துறையினர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொறுப்பாளர்களை காவல் நிலையத்தில் வெகு நேரம் உட்கார வைத்து அதன் பிறகு அனுப்பி உள்ளனர் என்று ஆர்ப்பாட்டத்தில் விளக்கி கூறினர்.
மேலும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அந்த மாவட்ட காவல்துறை நிர்வாகத்தின் போக்கை கண்டித்து கோசங்களை எழுப்பினார்கள்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இறுதியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொறுப்பாளர் கார்த்திக், ஜெயவேல் ஆகியோர் நன்றியுரை கூறினர்.