நாகர்கோவில் ஜூலை 26
குமரி மாவட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஊழியர்கள் 10 மணிக்கு சரியாக அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஊழியர்கள் காலை 10 மணிக்கு வந்து அலுவலகப் பணிகளை தொடங்க வேண்டும். ஆனால் பெரும்பாலான ஊழியர்கள் அவர்கள் விருப்பப்படி கால நேரம் இல்லாமல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட புதிய கலெக்டராக பதவிப் பொறுப்பு ஏற்று உள்ள அழகுமீனா கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளார்.
அதன்படி காலை 10 மணிக்கு அனைத்து ஊழியர்களும் அலுவலகத்தில் வந்து இருந்து பணியை தொடங்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் பதவிப் பொறுப்பேற்ற கலெக்டர் அழகு மீனா அலுவலக ஊழியர்கள் அதிகாரிகள் யாரும் தன்னை எந்த பொருட்களையும் கொண்டு வந்து பார்க்கக் கூடாது என்று கூறிவிட்டார். இதனால் ஊழியர்களும் அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.