கோவை ஏப்ரல் 13
சூலூர்
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
1926-2026 நூற்றாண்டு விழா பள்ளி கலைரங்கத்தில்
கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் குறுஞ்செய்தி வாயிலாக குறுகிய காலத்தில் தெரிவிக்கப்பட்டு முதல் கலந்தாய்வு கூட்டம்
பள்ளி நூற்றாண்டைத் தொட இருக்கின்ற நிலையில்
நூற்றாண்டு நிகழ்வுகளை ஆண்டு முழுமையும் கொண்டாட, முன்னாள் மாணவர்கள் திட்டமிட்டு
உள்ளூர் முதல் உலகம் வரை பரவி வாழ்ந்து வரும் பள்ளியின் முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து செயல்படும் வகையில் இந்த நிகழ்வுகளைக் கட்டமைக்க ஓராண்டு காலத்தில் பள்ளிக்கான அடிப்படைக் கட்டமைப்பை உயர்த்துகின்ற வகையிலும் செயல்முறைகளை வகுக்க முறைப்படுத்தப்பட்ட குழுக்களை ஏற்படுத்தி கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள பள்ளியின் மூத்த முன்னாள் மாணவர் . திரைக்கலைஞர் சிவகுமார் தலைமையில் முன்னாள் அமைச்சர் முன்னாள் மேயர் செ.மா. வேலுச்சாமி முன்னணியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளி உதவி தலைமையாசிரியர், தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் பன்னீர்செல்வம் உட்பட பள்ளியின் முன்னாள் மாணவர் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள், பள்ளியில் பயின்ற 200 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பான ஆக்கப்பூர்வமான கருத்துக்களை கூறினார்கள். குறிப்பாக பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை சிறப்புற செய்ய வேண்டும் என வருகின்ற தலைமுறை அனைத்து துறையிலும் சாதனை படைத்தவர்களாக பள்ளி பெயர் வர வேண்டும் என்று அனைவரும் தங்கள் கருத்துக்களை எடுத்துக் கூறினர்.
மேலும் நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கு பல்வேறு வகைகளும் நிதி உதவி, பொருள் உதவி தருவதற்கும் பல்வேறு குழுக்களில் தங்களை இணைத்துக் கொள்ளவும் முன்னாள் மாணவர்கள் முன் வந்தனர். நிறைவாக அறக்கட்டளை பொருளாளர் அரிமா நடராஜன் நன்றி கூறினார்.