தக்கலை : மார்ச் 21:
தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பின் குமரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் தக்கலை
அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது.
மறைந்த ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாகர்கோவில் கல்வி மாவட்ட தலைவர் தினேஷ் ஆன்றன்
அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட தலைவர் ரைமன்ட்
தலைமை உரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர்
டோமினிக் ராஜ் கூட்ட அறிக்கையை வாசித்தார்.
அறிக்கை மீது உறுப்பினர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
கூட்டத்தில் அரசு விதிகளுக்கு உட்பட்டு பணி ஏற்பாணை கிடைக்காதவர்களுக்கு உடனடியாக ஏற்பளிப்பு வழங்கிட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை கேட்டுக் கொள்வது.
அரசு விதிகளுக்கு உட்பட்டு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பணியிடம் மாறுதல் செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு உடனடியாக ஏற்பளிப்பு அளித்து ஊதியம் வழங்கிடவும், உன்னங்குளம் வெஸ்லி தொடக்கப் பள்ளி, நாகர்கோவில் ஹோம் சர்ச் தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் பணி நியமனம் செய்யப்பட்ட
ஆசிரியர்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பணி ஏற்பாணை வழங்கிட வேண்டும்.
இக்கல்வியாண்டிற்கான பணியாளர் பணியிட நிர்ணயத்தில் பல்வேறு
குளறுபடிகள் உள்ளன.
அவற்றை சரி செய்வதோடு
ஆங்கில வழி இணை பிரிவு மாணவர் எண்ணிக்கையையும் கணக்கில் எடுத்து பணியிட நிர்ணய ஆணை வழங்கிட வேண்டும்.
வரும் 23 ஆம் தேதி ஜாக்டோ ஜியோ
அமைப்பு சார்பில் நடைபெறும் மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தில் உதவி பெறும் பள்ளிகளில் இருந்து திரளான ஆசிரியர்கள் அலுவலர்கள் கலந்து கொள்வது என்ன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில்
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோஸ் பென்சிகர், மாவட்ட நிர்வாகிகள் விஜயகுமார், ஆலிவர், தேவசோபனராஜ், ஆகியோர் உரையாற்றினர்.
செல்வதாசன், ஷெர்லின், விக்டர் ராஜ், அருட்சகோதரி குழந்தை தெரசா உட்பட பலர் கலந்து கொண்டு கருத்துப் பகிர்வு செய்தனர்.
மாநிலத் தலைவர் கண்ணன் நிறைவுரையாற்றினார்.
மாவட்ட அமைப்புச் செயலாளர் வினோத் நன்றி கூறினார்.