அரியலூர்,டிச;09
அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் 07.12.2024-ம் தேதி அன்று திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் மனோகர் மாவட்ட ஆயுதப்படையினை பார்வையிட்டு காவல்துறை வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் அவர்களின் தலைமையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை, ஏற்றுக்கொண்ட காவல்துறை துணைத் தலைவர், ஆயுதப்படை காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட உபகரணங்களை ஆய்வு செய்தும், காவல்துறையினர் பயன்படுத்தி வரும் வாகனங்களை தணிக்கை செய்தும், காவல் நிலையங்களில் செயல்பட்டு வரும் ரோந்து இரு சக்கர வாகனங்களை ஆய்வு செய்தார். மேலும் மோப்பநாய்ப் படை பிரிவு, ஆயுத கிடங்கு, மற்றும் ஆயுதப்படை அலுவலகம் ஆகியவற்றினை ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
விஜயராகவன் (மதுவிலக்கு அமலாக்க பிரிவு), ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் அருள்முருகன்,
மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செல்வகுமாரி, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் இளங்கிள்ளி வளவன் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டார்கள்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்