நாகர்கோவில் அக் 04
கன்னியாகுமரி மாவட்ட தொழிற்சங்க கூட்டுக் குழுவின் பொன்விழா ஆண்டு சிறப்பு பேரவை கூட்டம் அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது.
தோழர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு கூட்டம் தொடங்கியது.
அமைப்பின் தலைவர் தோழர் ராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்று தலைமை உரையாற்றினார்.
குமரி மாவட்டத்தில் கல் உடைக்கும் தொழிலாளி முதல் கல்லூரி பேராசிரியர் வரையிலுள்ள உழைக்கும் மக்களின் நெஞ்சங்களில் அரை நூற்றாண்டு காலம் ஆளுமை செய்துள்ள அமைப்பு குமரி மாவட்ட தொழிற்சங்க கூட்டுக்குழு.
1974 ஆம் ஆண்டு உருவாகி ஊழியர்களின் பணி பாதுகாப்பிற்கும், பொருளாதார கோரிக்கைகளுக்கும் ஆகவே செயல்பட்டு வந்த அமைப்பு விலைவாசி உயர்வு வேலையில்லா திண்டாட்டம் வேலை இழப்பு போன்ற சமூக பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து பல்வேறு இயக்கங்களை நடத்தியது. இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவை பூர்த்தி மனித ஆற்றலை ஒழித்துக் கட்டும் சோதனையோட்டம் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தொழிற்சங்க உணர்வும் ஒன்றுபட்ட செயல்பாடுகளும் முன்பை விட அதிகம் தேவைப்படும் நிலையில் ஜே சி டி யு அமைப்பு புணரமைக்கப்பட்டு
புதிய செயல் திட்டத்துடன்
முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் என்று எடுத்துக் கூறினார்.
அமைப்பினுடைய செயலாளர் தோழர் ராதாகிருஷ்ணன்
கன்னியாகுமரி மாவட்ட தொழிற்சங்க கூட்டுக்குழு கடந்து வந்த பாதைகள் குறித்து எடுத்துரைத்து
தொழிற்சங்கம்
50 ஆண்டுகள் கடந்து பயணித்ததை அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து கொண்டாட வேண்டும் என்று கூறினார்.
இதற்காக
புதிய ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
உறுப்புச் சங்கங்களினுடைய பிரதிநிதிகள் தங்களுடைய அமைப்பின் சார்பாக வாழ்துரை வழங்கினர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் பெல்லார்மின், சிஐடியு வி மாவட்ட செயலாளர் தோழர் தங்க மோகன், உழைக்கும் பெண்களின் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர்கள் தோழர் ஐடா, தோழர் இந்திரா, ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் தோழர் முரளிதரன், அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் தோழர் கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நவம்பர் 23ஆம் தேதி பொன்விழா மாநாட்டை சிறப்பாக நடத்துவது என்றும்
சாம்சங் தொழிலாளர்களுக்காக அக்டோபர் ஒன்பதாம் தேதி மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜேசிடியு மாவட்ட பொருளாளர் தோழர் ராஜு நன்றி கூறினார்.