மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட குடும்பநலத்துறையில் ஊர்தி ஓட்டுனராக 20 ஆண்டுகள் பணியில் விபத்தின்றி பணிபுரிந்தமைக்காக மா.முத்துமாரிக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட தங்கப்பதக்கம் மற்றும்
மாவட்ட குடும்ப நலத்துறையின் சார்பாக உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நெகிழி பைகள் பயன்பாடுகளை தடுக்கும் விதமாக
மஞ்சப்பைகளை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா வழங்கினார். உடன் கூடுதல் ஆட்சியர் மாவட்ட முகமை திட்ட அலுவலர் மோனிகா ரானா, துணை இயக்குனர் (குடும்ப நலம்) மரு.நடராஜன், இணை இயக்குனர் (நலப்பணிகள்) மரு.செல்வராஜ் , மாவட்ட சுகாதார அலுவலர் மரு.குமரகுருபரன் , மாநகர் நல அலுவலர் மரு.வினோத்குமார், அரசு இராஜாஜி மருத்துவமனை துறைத்தலைவர் மரு.ஜோதிசுந்தரம் ஆகியோர் உடன் உள்ளனர்.