திண்டுக்கல்லில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு த.வெ.க.சார்பில் கோலப்பொட்டி வெற்றி பெற்றவர்களுக்கு எல்.இ.டி.டிவி பரிசு!
தமிழக வெற்றி கழகம் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பாக மகளிர் தினத்தை முன்னிட்டு கோலப்போட்டி நடைபெற்றது.
திண்டுக்கல் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பாறமேட்டு தெரு பகுதியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக கோலப்போட்டி நடைபெற்றது
போட்டியில் 25-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். விதவிதமாக கலர் பொடிகள் தூவி வண்ண கோலங்கள் வரைந்து போட்டியில் ஆர்வத்துடன் சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டனர்.
மேலும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தர்மா விழாவில் கலந்துகொண்டு கோலங்களை பார்வையிட்டு முதல் மூன்று வெற்றியாளர்களை தேர்வு செய்தார்.
கோலப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிச்சயப்பரிசு வழங்கப்பட்டது. முதல் பரிசாக எல்.இ.டி.டிவி வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசாக மிக்ஸி, மூன்றாவது பரிசாக சீலிங் ஃபேன் வழங்கப்பட்டது.
மேலும் மாற்றுக் கட்சியில் இருந்து ஏராளமான பெண்கள் மாவட்ட செயலாளர் தர்மராஜ் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து கொண்டனர்.
இந்த விழாவை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பாக நடத்தப்பட்டது. விழாவை கிழக்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை ஏற்று நடத்தினார் இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட தலைமை இளைஞர் அணி நிர்வாகிகள்
G.மகேஷ்வரன்
P.M. முருகானந்தம்
P.M.K.விஜி
T.G.கார்த்தி
M. மனோகரன்
S.K. கார்த்தி
V. கார்த்திக்
R. சிவானந்தம்
S. ஜான் ஓஸ்டின்
A. சௌந்தர் ராஜ்
R. சுரேஷ்
R. பாரதி
மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.