திங்கள்சந்தை, மார்- 4
இரணியல் அருகே உள்ள மேற்குப் பரசேரியை சேர்ந்தவர் உதயகுமார். இவர் திருநெல்வேலி ரயில்வே அஞ்சல் சேவை துறையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சகுந்தலா (36). இவர் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நர்ஸ் ஆகும். கடந்த 22ஆம் தேதி பக்கத்து வீட்டை சேர்ந்த பொன்னையன் மற்றும் அவர் மகன் உதயகுமார் ஆகியோர் சேர்ந்து சகுந்தலா அவர் தாயார் கலா ஆகியோரை தாக்கியதாக தெரிகிறது.
இதில் காயமடைந்தவர்கள் ஆசாரி குமாரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிகிச்சை பெற்று, இரணியல் போலீசார் விசாரித்தனர். இந்த நிலையில் கடந்த 26.ஆம் தேதி சகுந்தலா வீட்டில் செல்லமாக வளர்த்த வளர்ப்பு நாயை இரவில் காணவில்லை. அது போன்று அவர் வேலைக்கு சென்ற போது, வீட்டில் வளர்த்து வந்த இரண்டு ஆட்டுக்குட்டிகளும் இறந்த நிலையில் கிடந்துள்ளது.
இது குறித்து சகுந்தலா இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் தங்களை தாக்கிய இரண்டு நபர்கள் தான் இந்த செயலை செய்திருக்க முடியும். எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் எனக் கூறி இரணியல் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.