சென்னை ஜூலை 30
சென்னை
ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனை மனு பாகர் வெண்கலம் வென்றிருப்பது பாராட்டுக்குரியது.
நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதலுக்கான இறுதிப்போட்டியில் மனு பாகர் 221.7 புள்ளிகள் பெற்று 3 வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் 33 வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பெண்மணி மனு பாகர் முதல் முறையாக வெண்கலப் பதக்கம் பெற்றிருப்பது சாதனைக்குரியது.
குறிப்பாக இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கமாக வெண்கலப் பதக்கம் பெற்றிருக்கும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனு பாகர் தாய் நாட்டிற்கு உலக அளவில் பெருமை சேர்த்திருக்கிறார்.
தனது கடின பயிற்சி தொடர் விளையாட்டு பக்க பலமான பெற்றோர் பயிற்சியாளர் ஆகியவற்றால் இந்த வெற்றியைப் பெற்றிருப்பது இந்திய விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது.
வீராங்கனையின் வெற்றிக்கு துணை நின்ற பெற்றோரையும் பயிற்சியாளரையும் பாராட்டுகிறேன்.
மேலும் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்றிருக்கும் வீராங்கனை மனு பாகரை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன்.
என்று குறிப்பிட்டுள்ளார்.