நீலகிரி. நவ.15
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனை தற்போது மூன்று கோடி ரூபாய் செலவில் புதிய மருத்துவமனை வளாகத்துடன் கட்டப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. அவசர சிகிச்சை பிரிவு, மற்றும் மருத்துவர்கள் சோதனை அறைகள், மருந்தகம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை அவசர சிகிச்சை நோயாளிகள் முதல் பல்வேறு துறை சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை பெற தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோத்தகிரி பகுதியை சேர்ந்த 3 வயது சிறுமிக்கு திடீர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டு இரவு எட்டு மணி அளவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளில் எந்நேரமும் மின் வசதி இருக்க வேண்டும் என்பது அரசு விதி ஆனால் அவசர சிகிச்சை பிரிவில் மின்சாரம் தடைப்பட்டு இருந்த நிலையில் அந்த சிறுமிக்கு டார்ச் லைட், செல்போன் வெளிச்சத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலையும் ஏற்படுத்தி உள்ளது.