ஈரோடு, ஆக 17 திருவண்ணாமலையில் ரூ.10 மதிப்பிலான குளிர்பானம் குடித்த சிறுமி இறந்தார். இதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி ஈரோடு பஸ் நிலையம் மேட்டூர் ரோட்டில் உள்ள வணிக வளாக கடைகள், ஓட்டல்கள் பேக்கரிகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ், செல்வன், அருண்குமார் ஆகியோர் சோதனை செய்தனர்.
அப்போது 14 கடைகள் மற்றும் பேக்கரிகளில் இருந்து 28 கிலோ எடை கொண்ட உணவு பண்டங்கள் தின் பண்டங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியான தேதி இல்லாமல் இருந்ததாலும் செய்தித்தாள்களில் தின்பண்டங்களை வைத்து இருந்ததாலும் அவைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன மேலும் காலாவதியான தேதி இல்லாமல் இருந்த 6 லிட்டர் குளிர்பான பாட்டில்களையும் அதிகாரிகள் கைப்பற்றி கீழே ஊற்றி அழித்தனர் இது தொடர்பாக 14 கடைகளுக்கு தலா ரூ 1000 அபராதம் விதிக்கப்பட்டது
இது குறித்து மாவட்ட பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் கூறும்போது
குளிர்பான தயாரிப்பாளர்கள் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை பின்பற்றி குளிர் பானங்களை விற்பனை செய்ய வேண்டும் தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் விதிமுறைகளின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.