சுசீந்திரம் ஜன 26
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம், அஞ்சு கிராமம், ஆரல்வாய்மொழி உள்பட பல்வேறு பகுதிகளிலும், கேரளாவின பல்வேறு பகுதிகளிலும் கிரிஜா என்ற பெண், நூதனமான முறையில் நகை பறிப்பு மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.அதாவது ஜாதகத்தில் தோஷம் கழிப்பதாக கூறி, கடந்த 15 வருடங்களாக நகைத்திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரை கன்னியாகுமரி போலீசார் கைது செய்துள்ளனர். கிரிஜாவிடம் இருந்து 33 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கவலகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கிரிஜா, இவருக்கு 54 வயது ஆகிறது. இவர் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து ஜோதிடம் பார்ப்பதுபோல் வருவாராம். தன்னிடம் பேசும் பெண்களிடம், “உங்கள் ஜாதகத்தில் தோஷம் இருக்கிறது. அதை நீக்க சிறப்பு பூஜை செய்ய வேண்டும். இந்த பூஜைக்கு நீங்கள் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம். நாங்கள் இதை தெய்வப் பணியாகவே செய்கிறோம்” என்று கூறுவாராம்.இதை உண்மை என்று நம்பி வீட்டுக்குள் அனுமதிப்பவர்களிடம் ஆசை வார்த்தை கூறி கவர்ச்சிகரமாக பேசுவாராம்.. டாப்பாவில் தண்ணீரை ஊற்றி அதில் மஞ்சள் நிறப் பொடியை கலந்து கொள்வாராம். பின்னர் ‘பூஜை பலிக்க வேண்டுமானால் இந்த தண்ணீரில் ஏதாவது ஒரு தங்க நகையை போட வேண்டும்’ என்று கிரிஜா கூறுவாராம். இதை கேட்டு அந்த பெண்களும் தான் அணிந்திருக்கும் தங்க சங்கிலியை கழற்றி போடுவார்களாம்.
பூஜையை முடித்த பிறகு செயின் போடப்பட்ட டப்பாவை கிரிஜா கொடுத்துவிடுவாராம். அதை பின்னர் திறந்து பார்த்து நகையை அணிந்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு செல்வாராம். பின்னர் டப்பாவை திறந்து பார்த்தால் அதில் நகை இருக்காது. இதேபோல் பல்வேறு விதமாக பேசி விதவிதமான முறையில் நகை பறிப்பு மோசடி செய்து வந்துள்ளாராம் கிரிஜா.
கிரிஜா இது போல் கடந்த 15 வருடங்களாக ஜாகத்தில் தோஷம் இருப்பதாக கூறி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம், அஞ்சு கிராமம், ஆரல்வாய்மொழி உள்பட பல்வேறு பகுதிகளில் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தாராம். இதேபோல் கேரளாவில் இதே பொய்யை சொல்லி நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தாராம். இந்த கிரிஜாவை கன்னியாகுமரி மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர். 15 வருடங்களாக ஏமாற்றி வந்த பெண் சிக்கியதால் சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.. கிரிஜா மீது ஏராளமான வழக்குகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரிடம் இருந்து 33 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.