தேனி.
கோவாவில் நடைபெற்ற ஓபன் இன்டர்நேஷனல் ஃபாம் 1 சர்டிபிகேட் சிலம்பப் போட்டியில் சின்னமனூர் மாணவர்கள் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
சின்னமனூர் கருங்கட்டான் குளம் பகுதியில் இயங்கி வரும் வீரமங்கை வேலுநாச்சியார் சிலம்ப கலைக்கூடம் சார்பில் ஆசான் ஈஸ்வரன் தலைமையில் (25.8-24) அன்று கோவாவில் நடைபெற்ற ஓபன் இன்டர்நேஷனல் 1 சர்டிபிகேட் சிலம்பப் போட்டியில் கலந்து வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் 4 வீராங்கனைகள் முதலிடமும் 3 பேர் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். வெற்றிவாகை சூடிய வீரர் வீராங்கனைகளுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கி ஊக்கப்படுத்தினர். செப்பேடு புகழ் பெற்ற தேனி மாவட்டம் சின்னமனூருக்கு பெருமை தேடித்தந்த வீரர், வீரனைகளுக்கு சின்னமனூர் வாழ் மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்க வைக்கும் விதமாக மறவர் சங்கம் சார்பில் நினைவு பரிசும் பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.இதில் சங்க நிர்வாகிகள் தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் தூபாய் பிக் புல் எம்பயர் நிறுவன பங்குதாரர்கள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.