மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மூன்றாண்டுகால ஆட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏழை, எளிய, விழிம்பு நிலையில் உள்ள மக்கள், மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட 14,261 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது என நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு அவர்கள் தகவல்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில், மக்களைத் தேடி மருத்துவம், விடியல் பயணம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன், கலைஞரின் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மேலும், ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களும் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக, ஏழை, எளிய, விளிம்பு நிலையில் உள்ள 2,215 நபர்களுக்கும், பாரத பிரதமர் ஜன்மான் திட்டத்தின் கீழ், 349 நபர்களுக்கும், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (கிராமின்) திட்டத்தின் கீழ், 377 நபர்களுக்கும், கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ், 92 நபர்களுக்கும், மூன்றாம் பாலினத்தவர்கள் 35 நபர்களுக்கும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இனத்தைச் சேர்ந்த 5,677 நபர்களுக்கும், வன உரிமைச் சட்டத்தின் கீழ் 227 நபர்களுக்கும், கிராம நத்தம் பட்டா 1,816 நபர்களுக்கும், ஆக்கிரமிப்பு வரன்முறைப்படுத்தி பட்டா வழங்குதல் 3,473 நபர்கள் என மொத்தம் 14,261 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், போச்சம்பள்ளி வட்டம், நாகோஜனஹள்ளி பேரூராட்சி, வேலம்பட்டி சத்தியவாணிமுத்து நகரில் 40 வருடமாக ஒரே இடத்தில் கூட்டுக் குடும்பமாக வசித்து வரும் மக்களுக்கு தற்போது வேலம்பட்டியிலேயே 2 சென்ட் அளவில் வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் 14.10.2024 அன்று வழங்கி, வரும் நிதியாண்டில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டி தரப்படும் எனத் தெரிவித்தார்.
இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளி பிரேமா க/பெ.சக்திவேல் (செல்:9952351890) தெரிவித்ததாவது:
நான் எனது குடும்பத்துடன் (கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன்) போச்சம்பள்ளி வட்டம், நாகோஜனஹள்ளி பேரூராட்சி, வேலம்பட்டி சத்தியவாணிமுத்து நகரில் 40 வருடமாக வசித்து வருகிறேன். நானும், எனது கணவரும் கூலி வேலை செய்து வருகிறோம். எங்களது
வருமானம் குழந்தைகளின் படிப்பு மற்றும் குடும்ப அத்தியாவசிய செலவிற்கே சரியாக இருந்தது. எங்களுக்கு சொந்தமாக நிலம் வாங்கி அதில் வீடு ஒன்று கட்டி வசிக்க நீண்ட நாள் விருப்பமாக இருந்தது. இந்நிலையில் பட்டா கேட்டு மனு அளித்திருந்தேன்.
அதனைத்தொடர்ந்து, தற்போது வேலம்பட்டியிலேயே 2 சென்ட் அளவில் வீட்டுமனைப் பட்டாவினை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் 14.10.2024 அன்று வழங்கினார். மேலும், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், வீடு கட்டித்தரப்படும் என உறுதியளித்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொற்கால ஆட்சியில் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமாக வீட்டுமனைப் பட்டா கிடைத்துள்ளது. தற்போது எங்களது மனம் நிறைந்துள்ளது
இந்த திட்டத்தினை செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களது மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளி கவிதா க/பெ.குமரன் (செல்:9092207023) தெரிவித்ததாவது:
போச்சம்பள்ளி வட்டம், நாகோஜனஹள்ளி பேரூராட்சி, வேலம்பட்டி சத்தியவாணிமுத்து நகரில் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எங்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். எனது கணவரும், நானும் கூலி வேலை செய்து வருகிறோம். எங்களது குடும்பத்தினர் இரண்டு தலைமுறையாக இதே பகுதியில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கென்று தனியாக நிலமோ, வீடோ இல்லை. தற்போது இடவசதி போதுமானதாக இல்லை. ஆனால் தற்போது இருக்கும் விலைவாசிக்கு நிலம் வாங்கி வீடு கட்டுவது எங்களுக்கு சிரமமாக உள்ளது. இந்நிலையில் இலவசமாக வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பின்படி, நாங்கள் வீட்டுமனைப் பட்டா வேண்டி மனுவும், மேலும் வருவாய் துறை அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தோம்.
அதனடிப்படையில் 14.10.2024 அன்று வேலம்பட்டியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் அவர்கள் 2 சென்ட் அளவில் வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணையை வழங்கினார். மேலும், வரும் நிதியாண்டில் வீடு கட்டி தருவதாக கூறியுள்ளார். இதனால் தற்போது எங்களது மனம் நிறைந்துள்ளது. இந்த திட்டத்தினை செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களது மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற (செல்:8525969849) அவர்கள் தெரிவித்ததாவது: பயனாளி அபிநயா க/பெ.வேலன்
போச்சம்பள்ளி வட்டம், நாகோஜனஹள்ளி பேரூராட்சி, வேலம்பட்டி சத்தியவாணிமுத்து நகரில் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எங்களது குடும்பத்தினர் 40 ஆண்டுகாலமாக இதே பகுதியில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். எங்களுக்கு தனியாக நிலமோ, வீடோ இல்லை. வீட்டுமனைப் பட்டா கோரி விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு இலவசமாக வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பின்படி, நாங்கள் வீட்டுமனைப் பட்டா வேண்டி மனு
அளித்திருந்தோம். அதனடிப்படையில் வேலம்பட்டியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் அவர்கள் வேலம்பட்டியில் 2 சென்ட் அளவில் வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையை வழங்கினார்.
இதனால் எங்களுக்கு மனம் நிறைந்துள்ளது. இத்திட்டத்தை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு எங்கள் குடும்பத்தினர் சார்பாக மனம் நிறைந்து நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தொகுப்பு:
சு.மோகன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.
அ.க.ரமேஷ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி), கிருஷ்ணகிரி மாவட்டம்.