வேலூர் 27
வேலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் சத்துவாச்சாரி பாமக அலுவலகத்தில் பொதுகுழு கூட்டம் பொது செயலாளர் மோகன்ராஜ் தலைமையிலும், தலைவர் தயாகார்த்திக் முன்னிலையிலும் நடைபெற்றது .இதில் சிறப்பு அழைப்பாளர்கள் கிழக்கு மாவட்ட செயலாளர் கே. எல் .இளவழகன், மாவட்ட தலைவர் பி.கே .வெங்கடேசன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். உடன் சமூக நீதிப் பேரவை மாநில ஊடகப்பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கலைச்செல்வன் ,வேலூர் மேற்கு மாவட்ட பாட்டாளி தொழிற்சங்க செயலாளர் சசிகுமார் ,மேற்கு மாவட்ட தலைவர் ரமேஷ், மாநில சர்க்கரை ஆலை பிரிவு மாநில பொதுச் செயலாளர் டி .கே .எம். மோகனம் , சமூக ஊடகப்பிரிவு எஸ். தேவா, மற்றும் உறுப்பினர்கள் , நிர்வாகிகள் ,பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக பொருளாளர் தேஜோ நன்றியுரையாற்றினார் . இதில் பணிமனையில் உள்ள தீராத பிரச்சனைகளை தீர்க்க மேலான் இயக்குநரை சந்தித்து நேரம் கேட்பது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, தொழிற் சங்கத்திற்கு உண்டான விகிதாச்சார பணி ஒதுக்கீடு கேட்டுப் பெறுவது, ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது