செங்கல்பட்டு மாவட்ட கார் விற்பனையாளர் நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சேலையூரில் நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்ட கார் விற்பனையாளர் நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார் மாவட்ட துணைத்தலைவர் பிரகாஷ் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஒருங்கிணைப்பாளர் பென்னி பொருளாளர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வைத்தார்
இதில் சிறப்பாக விருந்தினராக உலக ஆணழகன் சாம்பியன் ராஜேந்திர மணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான கார் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாக இடம் பேசிய சங்கத்தின் தலைவர் பாலாஜி கூறும் போது கார் விற்பனையில் ஆன்லைன் வர்த்தகமும் வந்துள்ளதால் தற்போது நேரடி விற்பனையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் ஆன்லைன் வர்த்தக மூலம் வாடிக்கையாளர்கள் ஏமாறக்கூடிய சூழ்நிலையும் உருவாகியுள்ளதாக கூறினார்.
மேலும் இதுபோன்ற ஆன்லைன் கார் விற்பனை வர்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இறுதியாக சங்க உறுப்பினர்களை உற்சாகப்படுத்தும் வகையில் குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு டிவி பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபகரண பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டது.