திண்டுக்கல் நாகல் நகர் எரிவாயு தகனமேடை அறக்கட்டளை தலைவர் நடராஜன் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் மஹாஜோதி ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டத்தில் திண்டுக்கல் நாகல் நகர் வேடபட்டி எரிவாயு தகன மேடை கடந்த நான்கு ஆண்டு காலமாக மக்கள் பயன்பாடு இன்றி கிடக்கிறது. மேலும் கோவிந்தாபுரம் மின்மாயனத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 20 பிரேதங்கள் வந்து கொண்டிருக்கிறது.சில நேரங்களில் முதல் நாள் வந்த பிரேதம்,அடுத்த நாள் எரிக்க கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. நாகல் நகர் பகுதி வேடபட்டி உள்ளிட்ட மக்கள் பிரேதத்தை எரிக்க கோவிந்தாபுரம் வரை செல்ல வேண்டி உள்ளது.
மக்கள் தொகை பெருக்கம் காரணமாக வேடபட்டி எரிவாயு தகன மேடைக்கு பதிலாக மின்சார மயானமாக அமைத்து தர தமிழக அரசை வேண்டுகிறோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில்,
செயலாளர் இரா.வீரபாண்டியன்,
பொருளாளர் சுப்பிரமணியன்,
இணைச்செயலாளர்
சாந்திலால்,
கௌரவ ஆலோசகர்கள் /நிர்வாகிகள்
சிவராம், அருள் ஜோத்,
சட்ட ஆலோசகர்
வழக்கறிஞர்
லெட்சுமணன்
டிரஸ்டிகள்
திமுக முன்னாள் கவுன்சிலர் சந்திரசேகரன்,
திமுக முன்னாள் கவுன்சிலர் முகமது ரபீக், திமுக முன்னாள் கவுன்சிலர்
விஜயகுமார், ராமமூர்த்தி,
பிரபாகரன்,
மனோகரன்,
Dr. ஜெயராம்,
TN. மகேந்திரன்,
K.M.ரமன்லால்,
K.S.P. மனோகரன்,
Dr. R.உதயகுமார், ஜெயபிரகாஷ், ஆகியோர் கலந்து கொண்டனர்.