பூதப்பாண்டி – நவம்பர் – 5 –
பூதப்பாண்டியை அடுத்துள்ள ஞாலம் ஊராட்சிக்குட்ட காரியாங்கோணம் பகுதியில் 2 கோடியே பத்து இலட்சம் ரூபாய் செலவில் எரிவாயு தகன மேடை அமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக செயல்முறை ஆணையின்படி நிர்வாக அனுமதி பெறப்பட்டு அதற்க்கான இடங்களை ஆய்வு செய்யும்போது ஞாலம் ஊராட்சி பகுதி மக்கள் ஒரு பிரிவினர் அதற்க்கு எதிர்ப்பும் ஒரு பிரிவினர் அதற்க்கு ஆதரவும் தெரிவித்து வந்தனர். சில அமைப்புகளும் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் எதிர்ப்பதாகவும், ஆதரிப்பதாகவும் மனுக்கள் அளித்து வந்தனர்கள். இந்நிலையில் மாவட்ட வருவாய் அலுவலரின் தலைமையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தினை பார்வையிட்டு இது குறித்து அதிகாரிகள் தரப்பிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டமும் கூட்டினர். இதில் சம்பந்தப்பட்ட இடத்தின் அருகே அரசால் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவும், குடியிருப்புகளும், பாசன கால்வாயும் செல்வதால் இதனால் இப்பகுதி வாழ் மக்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் வருமா திட்டத்தை தொடரலாம என்று இருக்கும் நிலையில் ஞாலம் ஊராட்சி பகுதியை சேர்ந்த ஜெகதீஸ் என்பவர் இது குறித்து மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார் அதற்க்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக இந்த திட்டத்தை கைவிட்டதாகவும் வேறு (மாற்று )இடங்களுக்கு இடம் பார்ப்பதாகவும் பதில் கூறப்பட்டுள்ளது.