தருமபுரியில் அனைத்து கட்சி சார்பில் டாக்டர் அம்பேத்காரின் 68- ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தமிழ் புலிகள் கட்சி சார்பில் முனுசாமி மேற்கு மாவட்ட செயலாளர் ,ராஜேந்திரன் மத்திய மாவட்ட செயலாளர், சக்திவேல் நகர செயலாளர், சிலம்பரசன் மத்திய மாவட்ட துணைச் செயலாளர், மாதேஷ் மாவட்ட தொண்டர் அணி செயலாளர், மாதேஸ்வரன் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர், சீனிவாசன் தருமபுரி பொறுப்பாளர், ஸ்ரீகாந்த் நல்லம்பள்ளி ஒன்றிய பொருளாளர், தங்கப்பெருமாள் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், முத்துராஜ் தருமபுரி ஒன்றிய செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சண்முகசுந்தரம் விவசாய அணி, வெங்கடேசன் மாநில ஒருங்கிணைப்பாளர், மணிகண்டன் மாவட்ட தலைவர் விவசாய அணி, முபாரக் மாவட்ட தலைவர் சிறுபான்மை பிரிவு மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். திராவிட முன்னேற்ற கழக சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணியம் ,நகர செயலாளர் நாட்டான் மாது, பொருளாளர் தங்கமணி, முல்லைவேந்தன், சுருளி ராஜன், மே. அன்பழகன், ராஜா மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். தலித் விடுதலை கட்சியின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் செங்கோட்டையன், நாகேந்திரன் மாவட்ட செயலாளர், மாதையன் மாநிலச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆதி திராவிட மகாஜன சங்கம் சார்பில் தலைவர் பி. எம். அன்பழகன் செயலாளர், உதயசந்திரன் துணைச் செயலாளர், மாதேஷ் ,பாரதி, பார்த்தியப்பன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.