நாகர்கோவில் – ஆக – 21,
முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் 80 வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சந்திப்பில் நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பாக மாநகர காங்கிரஸ் கட்சி தலைவர் நவீன்குமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்தியின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன் , டாக்டர் . சிவகுமார், செல்வம், மாநகர மாவட்ட காங்கிரஸ் மகளிரனி தலைவி சோனி விதுலா மகேர், சிவ பிரபு, கவுன்சிலர் அருள் சபிதா ,சிறுபான்மை துறை மற்றும் மாதவலாயம் ஜமாத் தலைவர், எம்.எஸ். ஹச் , நகர் நற்பணி மன்றம் பொதுமக்கள் குறைகளை அரசுக்கு தெரிவிக்கும் முகைதீன் சாகுல் ஹமீது, மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜீவ் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து ஊர்வலமாக வேப்ப மூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலை வரையிலும் சென்று மீண்டும் ராஜீவ் காந்தி சிலை வந்து பேரணியை நிறைவு செய்வதாக இருந்தது. ஆனால் பேரணியை நடத்த போலீசார் அனுமதி வழங்க மறுத்ததால் காவல்துறையினருக்கும் காங்கிரசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டமான சூழ்நிலை உருவானது. பேச்சுவார்த்தைக்கு பின் சுமூகமான முடிவு எட்டப்பட்டு ராஜீவ் காந்தி சிலையை பேரணியாக சுற்றி வந்து நிறைவு செய்து கொண்டனர்.